இன்றைய திகதியில் எம்முடைய இல்லங்களில் வசிக்கும் இளம்பெண்கள் 'ஏ ' லெவல் கல்வியை கற்று தேர்ச்சி அடைந்த பிறகு.. குடும்பத்தின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு அருகில் இருக்கும் விற்பனை நிலையங்களில் பணியாற்ற விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் சம்பாதிக்க தொடங்கியதும் முதல் செலவாக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் தங்கம் என்பது மகாலட்சுமியின் அம்சம் என்பதால் குறைந்த அளவிலாவது தங்கம் தங்களிடத்தில் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
இதற்காக தங்க நகையை சேமிப்பதிலும், வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களின் எண்ணம் ஈடேறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் தங்கம் தொடர்பான பல பயனுள்ள குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக தங்கம் வாங்குவதற்கான சிறந்த நாளை பற்றி நாம் பெருவாரியாக அறிந்திருப்போம். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த தங்க நகையை எந்த காரணம் கொண்டும் இழக்காமல்... அவை நம்மிடமே தங்கி பல்கி பெருக வேண்டும் என்றால், சில சூட்சமமான விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் தங்கம் வாங்குவதற்காக திட்டமிட்டால்... முதலில் உங்களது வீட்டின் பூஜை அறையில் சொர்ண ஆகர்ஷண கணபதி எனும் விநாயகரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்யுங்கள். அதனை நாளாந்தம் வணங்குங்கள்.
அதன் பிறகு உங்களது தங்க நகை சேமிப்பு அல்லது தங்க நகை வாங்குவதற்கான திட்டங்கள்... அதற்கான வருவாய்கள்... உயரத் தொடங்கும். அதே தருணத்தில் தங்கத்தை தங்களுடைய சேமிப்பின் முதலீடு என கருதும் பெண்களும், பெண்மணிகளும் கீழ் கண்ட விடயத்தை உறுதியாக பின்பற்றலாம்.
அதாவது நீங்கள் தங்கத்தை வாங்குவதாக இருந்தால் அதற்கென பிரத்யேகமான நாளையும், நட்சத்திரத்தையும் தெரிவு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அஸ்வினி, ஹஸ்தம், புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், பூசம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.. ஆகிய நட்சத்திர நாளை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு விற்பனை நிலையத்தில் இருந்து தங்கத்தையோ அல்லது தங்க நகையையோ வாங்கிய பிறகு அதனை நேரடியாக வீட்டிற்கு எடுத்து வந்து அணிந்து கொள்ளாமல்.. சித்த யோகமும் சுவாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் உங்களது வீட்டின் பூஜை அறையில் இருக்கும் சொர்ண ஆகர்சன கணபதி உருவப்படத்திற்கும முன் உங்களின் தங்க நகையை வைத்து முழு மனதுடன் வழிபட வேண்டும். அப்போதுதான் அந்த தங்க நகைகளில் சூட்சமமாக மறைந்து இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும்.
அதற்கு முன்னதாக தங்கத்தை விற்பனை நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு அதனை மஞ்சள் கலந்த நீரில் நனைத்திட வேண்டும். பிறகு அதனை வெண்மை வண்ண பருத்தி துணியால் மென்மையாக துடைக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பூஜை அறையில் சொர்ண ஆகர்சன கணபதி முன் வைத்து வழிபட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நீங்கள் விரும்பி வாங்கிய தங்கத்தையோ அல்லது தங்க நகையோ உங்களது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் அணிவிக்க வேண்டும். அதன் பிறகு அதனை நீங்கள் பாவிக்கலாம். அணியலாம். இந்த முறைப்படி நீங்கள் தங்கத்தையும், தங்க நகையையும் வாங்கி பாவிக்கும் போது.. அந்த தங்க நகை உங்களிடமே தங்கும். எந்த ஒரு காரணத்திற்காகவும் அவை வெளியில் செல்லாது. அத்துடன் உங்களது வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM