ஹட்டன் டன்பார் மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்துக்கு  வருகைத்தரவுள்ள இந்திய பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஹெலிகொப்டரில் தரையிறங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன் போது இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிக்கொப்டர்கள் டன்பார் மைதானத்தில் தரையிறக்கப்பட்டன.

டன்பார் மைதானத்துக்கு யாழப்பாணத்துக்கான இந்திய தூதுவர் நடராஜன் , கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன்  மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் , இந்திய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.