அபிலாஷனி லெட்சுமன்
சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட் லிமிடெட்) இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லக்ஷ்மிநாராயணன் அறக்கட்டளையின் ஊடாக கட்புல அரங்கேற்ற பல்கலைகழகத்திற்கு பத்மபூஷன் எல். சுப்ரமணியத்தினால் டிஜிட்டல் இசை நூலகம் மற்றும் புத்தக அன்பளிப்பு நிகழ்வு கொழும்பு 07 கட்புல அரங்கேற்ற பல்கலைகழகத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு தமிழகத்தைச் சேர்ந்த வயலின் இசைக்கலைஞர் பத்மபூஷன் எல். சுப்ரமணியம், அவரது பாரியார் கவிதா சுப்ரமணியம் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததுடன் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரோஹன் நெத்சிங்க, சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட் லிமிடெட்) முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி அக்ரஹேர கஸ்ஸபா ,சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட் லிமிடெட்) இன் தலைவர் கௌசல்யா விக்ரமசிங்க, இலங்கை IOC முகாமைத்துவ பணிப்பாளர் தீபக் தாஸ், அசோக் லேலண்ட் இயக்குநர் உமேஷ் கௌதம், சார்க் இயக்குநர் கலாநிதி பினா காந்தி , இந்திய கலாச்சார மையம் - பேராசிரியர் அங்குரன் தத்தா , SLBC தலைவர் கலாநிதி முதிதா குணசேகர , SLBC பிரதி பொது முகாமையாளர் மயூரி அபேசிங்க ஜே, கலாநிதி ஆரூரன் அருணந்தி மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வானது பத்மபூஷன் எல். சுப்ரமணியத்தின் தந்தை பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணனின் நினைவாகவும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய வகையிலும் சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட் லிமிடெட்) உறுப்பினர்களினாலும் இசைக் கல்லுரியின் கலை பீடாதிபதி சரத் பெர்ணான்டோவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்புல அரங்கேற்ற பல்கலைகழகத்தின் நூலகத்திற்கு டிஜிட்டல் இசை நூலகத்தை திறந்து வைத்ததுடன் அவரது தந்தையினதும் பத்மபூஷன் எல். சுப்ரமணியத்தினதும் கலை பயணத்தை எடுத்துரைக்கும் பல நூல்களை அன்பளிப்பு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் வாழ்வின் கலை பயணத்தை எடுத்துரைக்கும் வண்ணம் அவரது மாணவர்களினால் நிகழ்த்தப்பட்ட வயலின் இசையின் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பத்மபூஷன் எல். சுப்ரமணியம், நிகழ்வில் கலந்துக் கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவரது தந்தை பற்றி சில விடயங்களை பகிர்ந்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய வயலின் என்பது ஒரு பொதுவான இசைக்கருவி ,இது மற்றைய இசைக்கருவிகளோடு ஒரு பகுதியாக வயலின் இசைக்கருவி இசைக்கப்படுகின்றது. என் தந்தை பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணன் வயலின் இசைக்கருவி முதன்மை இசைக்கருவியாக இருக்கவேண்டும் என்று விரும்பினார்.
அக்காலப்பகுதியில் குறைந்தளவிலான வயலின் இசைக்கலைஞர்களும்,இசை நுட்பங்களும் இருந்தது. அப்போது ஒரு கலைஞராக உருவாக பல சவால்கள் இருந்தது. 1958 ஆம் ஆண்டு யாழ்பாணம் நல்லூர் கோவிலில் எனது முதல் இசை பயணத்தை ஆரம்பித்தேன். அன்று பலர் என்னை இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவேண்டாம் என்று கூறியபோதிலும் என் தந்தை என்னை இசை நிகழ்சியில் கலந்துக்கொண்டே ஆக வேண்டும் என்று கூறி இசை நிகழ்ச்சியில் பங்குபற்றச் செய்தார்.
அங்கு நிரம்பியிருந்த அத்தகைய கூட்டத்தின் மத்தியிலும் கச்சேரியின் நடுவிலிருந்து நான் நன்றாக வாசித்ததாக உணர்ந்தேன் இதன்போதே என் இசை பயணம் ஆரம்பமாகியது. இவ்வாறு ஆரம்பமாகிய தனது வாழ்வின் அடுத்தடுத்த காலப்பகுதியில் பல்வேறு இசைக்கலைஞர்களை பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வந்து இசை விழாவாக நிகழ்த்தாது உலக இசை விழாவாக நிகழ்த்தினோம். அப்போது பல்வேறு இசைக்கலைஞர்களும் பாரம்பரிய இசைக்கலைஞர்களும் வருகை தந்து பங்குபற்றினார்கள்.
தற்போது என் தந்தை பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணன் நினைவாக (Lakshminarayanan globle centers of Excellencer) லக்ஷ்மிநாராயணன் அறக்கட்டளையினை நிறுவினோம். இதன் மூலம் இசைக் கல்வியை ஊக்கப்படுத்தினோம்.
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பினை இந்தியாவில் கற்கலாம். இதன் மூலம் நான்கு புலமை பரிசில்கள் வழங்குகின்றோம். இவ்வாறு கற்கும் மாணவர்கள் மூன்று வருடங்களுக்கு பிறகு கலைமாணி பட்ட படிப்பினை நிறைவு செய்துள்ளனர். இவ்வாறு கற்கும் மாணவர்களுக்கு புலமை பரிசில்களை வழங்கி வருகின்றோம். அத்துடன் இவ்வருடம் முதுமாணி பட்ட படிப்பிற்கும் புலமை பரிசில் வழங்கவுள்ளோம்.
இந்த நிகழ்வின் ஊடக கலைஞர்களை வளர்ப்பதிலும் பங்காற்றுவதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். கலைஞர்கள் இசை மட்டு மன்றி மேற்கத்தேய உலகளாவிய இசையினை கற்று உள்ளூர் ரசிகர்களை மாத்திரம் ஈர்க்காது உலகளாவிய ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என பத்மபூஷன் எல். சுப்ரமணியம் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM