கண்டியில் போலி இலக்கத்தகடுகளுடன் இரண்டு வாகனங்கள் மீட்பு

13 Nov, 2024 | 03:54 PM
image

கண்டியில் இரு வெவ்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கண்டி - அஸ்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த ஜீப் வாகனத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,  கண்டி - கட்டுகெலே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56