எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா தீவுக்கான விமான சேவைகளை பல சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன.
வானத்தில் எரிமலை சாம்பல் சூழ்ந்து காணப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிக்கு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதாக ஜெட்ஸ்டார் மற்றும் குவாண்டாஸ் ஆகிய விமான சேவைகள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, ஏர் ஏசியா மற்றும் விர்ஜின் ஆகிய விமான சேவைகளும் விமான பயணங்களை இரத்துசெய்துள்ளதாக ஃப்ளைட்ராடார் 24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சிறந்த சுற்றுலாப் பகுதியாக பாலி காணப்படுவதோடு, அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக திகழ்கிறது.
பாலியில் இருந்து சுமார் 800 கிலோ மீற்றர் (497 மைல்) தொலைவில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்திலுள்ள லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை கடந்த 3 ஆம் திகதி முதல் தடவையாக குமுறியதில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த எரிமலை செவ்வாய்க்கிழமை மீண்டும் குமுறத் தொடங்கி சாம்பல்களை வெளியேற்றி வருகிறது.
இதன் காரணமாக கடந்த 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கான 80 விமானங்கள் பாலியில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக Ngurah Rai விமான நிலையத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளது. பசிபிக் எரிமலைப் பகுதியில் (ரிங் ஆஃப் ஃபயர்) அமைந்துள்ளது. இது பல்வேறு டெக்டோனிக் தகடுகளின் மேல் அதிக நில அதிர்வு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், லெவோடோபி எரிமலை குமுறலினால் வெளியேறும் சாம்பல் துகள்கள் வானில் 10 கிலோ மீற்றர் உயரத்தை எட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM