கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லாத நிலையில், இரண்டாம் தரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வாரம் முன்பாகவே அமலனின் மனைவியிடம் ஜெயராசன் எல்லை மீறியதைச் சுட்டிக்காட்டிய ஜூரிகள், இது கோபத்தினால் இடம்பெற்ற கொலை என்றும் திட்டமிடப்பட்டதல்ல என்றும் குறிப்பிட்டனர்.