சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 43 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 62 வயதுடையவர், விவாகரத்து செய்ததன் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான மன அழுத்தத்தின் காரணமாகவே சந்தேக நபர் இவ்வாறு செய்துள்ளதாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சாரதி தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும் இதன் காரணமாக விபத்து தொடர்பில் முழுமையான வாக்குமூலம் பொலிஸாரால் பெற முடியாதுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தையடுத்து அந்த விளையாட்டு மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM