(நெவில் அன்தனி)
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீல் மெக்கென்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகக் குறுகிய காலத்திற்கு ஆலோசகப் பயற்றுநராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நீல் மெக்கென்ஸி, தென் ஆபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் ஒரு தொகுதி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கவுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் டெஸ்ட் தொடருக்கு முன்பதாக பயிற்சிப் போட்டிகள் நடைபெறாததால் பத்து வீரர்களைக் கொண்ட முதல் தொகுதி டெஸ்ட் வீரர்கள் முன்னாயத்த பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
தென் ஆபிரிக்க நிலைமைகளின் உள்ளார்ந்த தன்மைகள், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப இலங்கை வீரர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்தவற்கான மிக முக்கிய ஆலோசனைகளை நீல் மெக்கென்ஸியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்காவுக்காக விளையாடி 4948 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள நீல் மெக்கென்ஸி, இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரை இலங்கை வீரர்களுடன் இணைந்து செயற்படுவார்.
அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரட்ன, ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு குமார, ப்ரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலன் ரத்நாயக்க, கசுன் ராஜித்த, லசித் எம்புல்தெனிய ஆகிய வீரர்களே ஏற்கனவே தென் ஆபிரிக்கா சென்றுள்ள ஒரு தொகுதி இலங்கை டெஸ்ட் வீரர்களாவர்.
இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி டேர்பன், கிங்ஸ்மீட் அரங்கில் நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 1ஆம் திகதிவரையும் இரண்டாவது போட்டி கெபெத்தா, சென் ஜோர்ஜ் அரங்கில் டிசம்பர் 5ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரையும் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM