(நெவில் அன்தனி)
ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் போட்டியை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடம் இருந்து பறிக்கப்பட்டால் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகக்கூடும் என அந் நாட்டின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பேச்சாளர் உறுதி செய்த அதே தினத்தன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய இந்தியா மறுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு மின்னஞ்சல் ஒன்றை ஐசிசி அனுப்பிவைத்துள்ளது.
இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசின் ஆலோசனைக்காகவும் வழிகாட்டலுக்காகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமர்பித்துள்ளது.
ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியை இரண்டு இடங்களில் நடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், இரண்டு இடங்களில் ஐசிசி சம்பியன் கிண்ணத்தை நடத்த முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மோஹ்சின் நக்வி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சம்பியன் கிண்ண கிரிக்கெட்டை முழுமையாக வேறொரு நாட்டில் நடத்துவதற்கு ஐசிசி பிரேரிக்குமேயானால், 'சம்பியன் கிண்ண கிரிக்கெட்டில் பங்குபற்ற வேண்டாம் என பாகிஸ்தான் அரசு ஆலோசனை வழங்கலாம்' என கிரிக்கெட் வட்டாரம் ஒன்று தெரிவித்தாக பாகிஸ்தானின் செய்திச் சேவை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மிகவும் தீவிரமாக பாகிஸ்தான் அரசு நோக்குவதாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
'தமது கிரிக்கெட் அணியை அயல் நாட்டுக்கு அனுப்பக்கூடாது என்ற இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் மென்மை போக்கைக் கடைப்பிடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் இருந்து நல்ல சைகைளை எதர்பார்க்கக்கூடாது' என்றார்.
இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு ஐசிசி அல்லது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதை பாகிஸ்தான் கிரிக்கட் சபை மறுக்க வேண்டும் என அரசாங்கம் கோரலாம் என அறியக்கூடியதாக இருப்பதாக அந் நாட்டு செய்தி சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு அயல் நாடுகளுக்கும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய கடந்த பல வருடங்களாக பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் பங்குபற்றுவதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தவிர்த்து வருகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2012இல் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தன. அதன் பின்னர் ஐசிசி மற்றும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் மாத்திரமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.
எவ்வாறாயினும் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றியிருந்தது.
பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி 19ஆம் திகதியிலிருந்து மார்ச் 9ஆம் திகதிவரை நடைபெறுவதாக இருக்கிறது.
கடந்த வருடம் நடத்தப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய இந்தியா மறுத்ததால், அப் போட்டி பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடத்தப்பட்டது.
நான்கு போட்டிகள் மாத்திரமே பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. ஏனைய போட்டிகள் கொழும்பில் நடத்தப்பட்டதுடன் இங்குதான் இந்தியாவும் விளையாடியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM