bestweb

மெலிக்னன்ட் ஓடிடிஸ் எக்ஸ்டெர்னா எனும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

12 Nov, 2024 | 05:11 PM
image

எம்மில் பலரும் நீராடிய பிறகு காதுகளில் இருக்கும் நீரை அல்லது ஈரத்தன்மையை வெளியேற்றுகிறோம் அல்லது சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் துணி , பட்ஸ் , ஊக்கு , என ஏதேனும் கையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்கிறோம். இதனால் காது பகுதியில் தொற்று பாதிப்பும், வலியும் ஏற்படக்கூடும். 

சிலருக்கு குறிப்பாக நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களுக்கு இத்தகைய பாதிப்பின் காரணமாக அவர்களுடைய காது பகுதியில் வலியுடன் கூடிய தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு உடனடியாக வைத்தியரிடம் சிகிச்சை பெற்று நிவாரணம் பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய சூழலில் தெற்காசிய நாடுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என வைத்தியர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். 

ஆனால் எம்மில் பலரும் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில்லை. இந்நிலையில் இவர்களுக்கு காதில் குறிப்பாக வெளி காது பகுதியில் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதனை மருத்துவ மொழியில் மெலிக்னன்ட் ஓடிடிஸ் எக்ஸ்டெர்னா என குறிப்பிடுகிறார்கள்.

சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இத்தகைய காதின் வெளிப்புறத்தில் ஏற்படும் தொற்று பாதிப்பை எளிதாக குணப்படுத்தி விட இயலும். ஆனால் நீங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்றால் அதே தருணத்தில் காதின் வெளிப்புறத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இவை நடுக் காது மற்றும் காதில் உள்ள கால்வாய் பகுதி ஆகியவற்றில்  பயணித்து மூளை உள்ளிட்ட பகுதிகளுக்குச் விரைவாக பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் காதில் ஏற்பட்டிருக்கும் தொற்று பாதிப்பை துல்லியமாக அவதானித்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவார்கள். 

அதே தருணத்தில் உங்களின் ரத்த சர்க்கரை அளவு குறித்த பிரத்யேக பரிசோதனைக்கும் பரிந்துரைப்பர். அதன் முடிவுகளின் அடிப்படையில் உங்களின் காது தொற்று பாதிப்பிற்கு வீரியமிக்க பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவர். 

அத்துடன் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனை மற்றும் அறிவுரையையும் வழங்குவர். இதனை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

வைத்தியர் வேணுகோபால்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56