14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், எலயாபத்துவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமியும் சமூக ஊடகத்தின் ஊடாக அறிமுகமாகியுள்ள நிலையில் இருவரும் நீண்ட நாட்களாகக் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபரான இளைஞன், சிறுமியின் நிர்வாண புகைப்படத்தைப் பெற்றுக் கொண்டு அதனை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி மிரட்டி சிறுமியை குருணாகல் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM