(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2024 அக்டோபர் மாதத்திற்கான அதிசிறந்த வீராங்கனை விருதை நியூஸிலாந்தின் அமேலியா கேரும் அதிசிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமான் அலியும் வென்றெடுத்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து நியூஸிலாந்து சம்பியனாவதற்கு பெரும் பங்காற்றியமைக்காக அமேலியாவுக்கு அக்டோபர் மாத ஐசிசி விருது வழங்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அற்புதமான சுழல்பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தமைக்காக நோமான் அலிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அக்டோபர் மாதத்திற்கான அதிசிறந்த வீராங்கனை மற்றும் வீரர் ஆகியோரின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று செவ்வாய்க்கிழமை (12) அறிவித்தது.
அக்டோபர் மாதம் நடைபெற்ற மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 24 வயதான அமேலியா கேர் 160 ஓட்டங்களைப் பெற்றதுடன் 19 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். ரி20 உலகக் கிண்ணத்தில் மாத்திரம் 15 விக்கெட்களை கேர் வீழ்த்தியிருந்தார்.
ரி20 உலகக் கிண்ண இறுதி ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் அமேலியா கேர் வென்றிருந்தார்.
பெப்ரவரி மாதத்திற்கான அதிசிறந்த வீராங்னைக்கான ஐசிசி விருதை வென்ற அமேலியா கேர், இரண்டாவது தடவையாக இந்த விருதை வென்று அசத்தியுள்ளார்.
நோமான் அலி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மீளழைக்கப்பட்ட நோமான் அலி, தொடரில் 20 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் ஐசிசி அதிசிறந்த வீரர் விருதை தனதாக்கிக்கொண்டார்.
அவரது பந்துவீச்சு சராசரி 13.85ஆக இருந்தது.
முதல்தானில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் பாகிஸ்தான் தோல்வி அடைந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 1 என பின்னிலையில் இருந்தது.
இந் நிலையில் 15 மாத இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியில் நோமான் அலி மீண்டும் இணைக்கப்பட்டார்.
முல்தானில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 147 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு 152 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
தொடர்ந்து ராவல்பிண்டியில் நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி டெஸ்ட் போட்டியில் 130 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்தினார்.
அவரது இந்த அதிசயிக்கத்தக்க பந்துவீச்சுக்கள் மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீசசாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முதல் தடவையாக இடம் பிடித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM