தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் 'புஷ்பா 2 -தி ரூல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி பிரத்யேகப் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா 2 -தி ரூல்' எனும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் , எதிர்வரும் 17 ஆம் திகதியன்று மாலை 6:00 மணி அளவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இதனால் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் அனைவரும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த முன்னோட்டம் இணையத்தில் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூலை விட இந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் 200 கோடியை கடக்கும் என்றும், மொத்த வசூல் இந்திய மதிப்பில் 600 கோடியை கடக்கும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM