இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஈழத்து நடிகர் சரண்

Published By: Digital Desk 2

12 Nov, 2024 | 02:59 PM
image

'டார்க் ஹெவன்' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்குன்ப அதிர்ச்சி அளித்து, ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் புலம்பெயர் நடிகர் சரண்.

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டார்க் ஹெவன்' எனும் திரைப்படத்தில் நகுல், சரண், டேனி தயாள், அலெக்ஸ், கோதை சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. கே. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார். 

வல்துறையின் புலனாய்வு வகைமையிலான இந்த திரைப்படத்தை கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ் எம் மீடியா ஃபேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அறிமுக காணொளி பிரத்யேக நிகழ்வாக சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் எம் மண்ணில் பிறந்து தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் நடிகர் சரண் உள்ளிட்ட பட குழுவினர் பலர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் நடிகர் சரண் படத்தின் இயக்குநர் பாலாஜிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய மகிழுந்தை மீண்டும் அவருக்கு பரிசாக அளித்தார்

இது தொடர்பாக பட குழுவினரிடம் பேசுகையில், '' படத்தின் இயக்குநர் பாலாஜி இதற்கு முன் இயக்கிய  'D 3' எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக அவருடைய மகிழுந்தை விற்பனை செய்திருந்தார். 

அதனை அவர் செல்லமாக 'என்னுடைய ராசியான லட்சுமியை விற்று விட்டேன்' என படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினர்களிடம் பலமுறை ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.  அதிலும் குறிப்பாக படப்பிடிப்பு நடைபெற்ற தளத்திற்கு அருகே உள்ள முக்கூடல் எனும் ஒரு ஊரில் தான் விற்பனை செய்ததாகவும் குறிப்பிட்டார். 

உடனே எமக்கு ஓர் எண்ணம் உதயமானது. அவர் அடிக்கடி லட்சுமி லட்சுமி லட்சுமி என பாசத்துடன் குறிப்பிடும் அந்த மகிழுந்தை விற்பனைக்கு வாங்கிய உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தொகையை செலுத்தி அதனை மீண்டும் நாங்கள் பெற்றுக் கொண்டோம். 

அதனை இந்த விழாவில் அவருக்கு பரிசாக அளித்தோம். வாய்ப்பளித்த இயக்குநருக்கு எங்களால் முடிந்த ஒரு சிறிய அளவிலான உதவிதான் இத்தகைய பரிசு'' என்றனர்.

இது தொடர்பாக படக் குழுவினரிடம் விசாரிக்கையில், ''இந்த திரைப்படத்தில் மூன்று வித்தியாசமான ஒப்பனையில் தோன்றும் நடிகர் சரண் தான் இதற்கு முழு காரணம் என்றும், அவர் இந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். 

அதனால் அவர் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என விரும்பி இத்தகைய செயலை தன்னிச்சையாக செய்திருக்கிறார்'' என விளக்கமளித்தனர்.

வாய்ப்பளித்த இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் சரண் , தமிழ் திரையுலகில் மேலும் பல வாய்ப்புகளைப் பெற்று, திறமைகளை வெளிப்படுத்தி, நல்லதொரு கலைஞராக அடையாளம் பெற வேண்டும் என வாழ்த்தினோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23
news-image

பக்தி பாடல்களுக்கு முதல் முறையாக இசையமைத்த...

2024-12-10 11:58:52
news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57