சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

12 Nov, 2024 | 01:24 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சித்தார்த் காதல் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'மிஸ் யூ' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் என். ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மிஸ் யூ' எனும் திரைப்படத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பால சரவணன், மாறன், சஷ்டிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். 

காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை 7 மைல்ஸ் பர் செகண்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காதல் காட்சிகள் , பாடல் காட்சிகள்,  எக்சன் காட்சிகள்,  சென்டிமென்ட் காட்சிகள் , ஆகியவை இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவின் உடன் இணையும் சாண்டி மாஸ்டர்

2026-01-19 17:50:56
news-image

டொவினோ தோமஸ் நடிக்கும் 'அதிரடி' படத்தின்...

2026-01-19 17:44:24
news-image

ஐந்து இந்திய மொழிகளில் "அனந்தா" பாபா...

2026-01-19 16:57:36
news-image

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் 'கட்டாளன்'...

2026-01-17 17:40:39
news-image

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட் '...

2026-01-17 17:25:22
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'ஆசை '...

2026-01-17 17:23:02
news-image

எக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் இசையமைப்பாளர் தேவி...

2026-01-17 17:20:55
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்திருக்கும்...

2026-01-17 17:18:11
news-image

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா '...

2026-01-19 10:10:27
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி...

2026-01-16 18:05:43
news-image

நடிகர் அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' திரைப்படத்தின்...

2026-01-16 17:54:54
news-image

'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் -...

2026-01-16 17:41:54