உலகின் முதலாவது லேசர் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட வெசாக் தோரணம் நாளை  (10) மாலை 7 மணிக்கு காலிமுகத் திடலில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களார் திறந்துவைக்கப்படவுள்ளது.

துறைமுக மற்றும் கடற்படை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வழிகாட்டலின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தோரணம், எதிர்வரும் 14ஆம் திகதி வரை மக்கள் கண்டுகளிக்கலாம்.

அறுபது அடி உயரமும் நாற்பது அடி அகலமும் கொண்ட இந்தத் தோரணத்தை ஜேர்மனிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கலாநிதி பிரபாத் சந்திம உக்வன்ன வடிவமைத்துள்ளார்.

மாலை நேரங்களில் லேசர் உதவியுடன் வானில் தோன்றவுள்ள இந்த புத்த காவியம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களைப் பெரிதும் கவரும் என பிரபாத் சந்திம உக்வன்ன தெரிவித்துள்ளார்.