பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற பழமொழியை உண்மையாக்கும் சில அதிர்ச்சிகரமான விசித்திர சம்பவங்கள் உலகத்தில் எங்கயாவது ஒரு மூலையில் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றன.

இது போன்ற சம்பவமொன்று அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் பதிவாகியுள்ளது. 

அதிவேகமாக வளர்ந்துவரும் இணையத்தளத்தின் மூலம் பல்வேறு முறையில் பணம் உழைக்க வழிகள் உண்டு அதையறிந்துக்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கெய்னஸ் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது கட்டிளமை பருவ உடலை விதவிதமாக செல்பியெடுத்து அதைவிட்டு பணம் சம்பாதித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் நடவடிக்கைகள் சமீபகாலமாக மர்மமாக இருந்தமையால் அவர்மீது சந்தேகப்பட்ட தாயார், மகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார்.

அவ்வப்போது, தனது அறையின் கதவை மூடிக்கொண்டு அந்த சிறுமி எப்போது பார்த்தாலும் கணனியே கதியாக கிடப்பதை கண்டு அவள் மேல் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அவள் வெளியே சென்றிருந்தபோது மகளின் கணனியை ஆராய்ந்த தாயார் திகைத்துப் போனார். இதுதொடர்பாக, அவர் பொலீஸில் புகார் அளித்ததால் அந்த சிறுமியை பொலீஸார் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

இணையதளம் மூலமாக அவளுக்கு அறிமுகமான சிலர், தாங்களே நிர்வாணமாக தங்களை செல்பி எடுத்து அவற்றை விற்பனை செய்யும் பிரபல இணையதளங்களை பற்றிய விபரங்களை அவளிடம் கூறியுள்ளனர்.

இதில் ஆர்வமடைந்த அந்த சிறுமி அன்றிலிருந்து சுமார் ஓராண்டுகாலமாக தன்னைத்தானே பலவிதமான நிர்வாண கோலங்களில் செல்பி எடுத்து அதை சுமார் 20 முதல் 100 டாலர்கள் விலைக்கு அவற்றை மின்னஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விற்று இதுவரை சுமார் 1100 டாலர்களை சம்பாதித்துள்ளது பொலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக இதுபோன்ற குற்றங்கள் பெருகிவருவதாக குறிப்பிட்டுள்ள பொலீஸார், அந்த சிறுமிக்கு மனநல மருத்துவமனையை சேர்ந்த உளவியல்துறை மருத்துவர்கள் மூலம் கவுன்சலிங் அளித்துவருவதாக கூறுகின்றனர்.