தேர்தலை நடத்த கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு 

Published By: Digital Desk 3

12 Nov, 2024 | 11:26 AM
image

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் பெறுபெறுகள் வெளியானவுடன் பொது இடங்களில் ஒன்று கூடி, பட்டாசு கொளுத்துவது சட்டத்தின் பிரகாரம் குற்றச்செயலாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகஸ்த்தர்கள் வாக்களிப்பு தினத்தன்று கடமைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கடமையில் ஈடுபடாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, தனியார் துறையில் சேவையில் ஈடுபடும் வாக்காளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:44:06
news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

சங்கின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு -...

2025-03-21 09:39:24
news-image

யாழில் 17 சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:39:04
news-image

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-03-21 09:38:15
news-image

வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை...

2025-03-21 09:37:48
news-image

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும்...

2025-03-21 09:37:26
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27