வவுனியாவில் நேற்று (08) மாலை 7 மணியளவில் இ.போ.ச சாலை நடத்துனர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பஸ் நிலையத்திலிருந்து பூவரசங்குளம்  ஊடாக செட்டிகுளம் செல்லும் இ.போ.ச. பஸ்ஸில் குளுமாட்டுச்சந்தியில் பஸ்ஸில் ஏறிய 4 பேர் கொண்ட குழுவினர் சண்முகபுரம் பகுதியில் இறங்கும்போது நடத்துனரை தகாத வார்த்தைகளினால் பேசியதுடன் நடத்தனர் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை (21வயது) இன்றைய தினம்  கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.