பட்டாணிச்சூரில் றிசாட் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் முரன்பாடு! கலவரமாகிய பொதுக்கூட்டம்; றிசாட்டின் வாகனத்தொடரணி அடித்துநொறுக்கப்பட்டது! 

Published By: Vishnu

11 Nov, 2024 | 11:31 PM
image

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்ப்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட்பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்துநொருக்கப்பட்டது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதானவீதிக்கு அருகாக இன்று மாலை 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச்சென்றிருந்தனர்.

சற்றுநேரத்தில் குறித்த மோட்டார்சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட்பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத்தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.  

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில்  குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.

கலவரத்தில் றிசாட் பதியூதீனின் வாகனத்தொடரணி அடித்து நொருக்கப்பட்டது. அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொருக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டது.  குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்தபகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது. 

சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.  சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கலவரநிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05
news-image

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி -...

2024-12-08 16:39:09
news-image

மின்கட்டணத்தை 2/3 மடங்கால் குறைப்பதாகக் கூறிய...

2024-12-08 15:33:06
news-image

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் கவனம்...

2024-12-08 15:39:23
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி...

2024-12-08 15:34:58
news-image

மின்கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு பேணுவதற்கு பரிந்துரை

2024-12-08 15:28:40
news-image

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள்...

2024-12-08 15:29:37
news-image

ஜா - எல பகுதியில் ஹெரோயினுடன்...

2024-12-08 15:31:51
news-image

வரக்காபொல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர்...

2024-12-08 15:26:54