(நெவில் அன்தனி)
ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாயிலும் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய ஐந்து நாடுகள் உட்பட 8 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.
நடப்பு சம்பியன் பங்களாதேஷுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன பி குழுவில் இடம்பெறுகின்றன.
பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த இரண்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகியனவும் இக் குழுவில் இடம்பெறுகின்றன.
ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், ஜப்பான் ஆகியன 19 வயதுக்குட்பட்ட ஆசிய பிறீமியர் கிண்ணப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றதன்மூலம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.
பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் நேபாளத்தை ஷார்ஜாவில் நவம்பர் 28ஆம் திகதியன்றும் ஆப்கானிஸ்தானை ஷார்ஜாவில் டிசம்பர் 01ஆம் திகதியன்றும் பங்களாதேஷை துபாயில் டிசம்பர் 03ஆம் திகதியன்றும் இலங்கை சந்திக்கவுள்ளது.
இரண்டு குழுக்களுக்குமான முதல் சுற்று முடிவடைந்தவுடன் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.
அரை இறுதிப் போட்டிகள் துபாயிலும் ஷார்ஜாவிலும் டிசம்பர் 06ஆம் திகதி நடைபெறும். அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள், 19 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் துபாய் விளையாட்டரங்கில் டிசம்பர் 8ஆம் திகதி விளையாடும்.
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ணப் போட்டி 1989இல் ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை நடந்து முடிந்துள்ள 10 அத்தியாங்களில் இந்தியா 7 தடவைகள் சம்பியனானதுடன் பாகிஸ்தானுடன் ஒரு தடவை இணை சம்பியனானது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன தலா ஒரு தடவை சம்பயினாகியுள்ளன. இலங்கை ஐந்து தடவைகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM