(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கிலே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்தமுறை கொழும்பில் போட்டியிட தீர்மானித்திருக்கிறது. நிச்சயமாக கொழும்பு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எஸ். இராஜேந்திரன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்முறை பாராளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 10 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. எமது கட்சிக்கு அனைத்து மாவட்டங்களில் பாரிய வரவேற்பு கிடைத்து வந்தது. அதனால் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களித்தால் எங்களுக்கு அதிக பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கிலே இந்தமுறை கொழும்பில் போட்டியி தீர்மானித்தோம்.
கொழும்பு மாவட்டத்தில் 20 வருடங்களாக தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருந்துவந்தவர்கள் கொழும்பு மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து, வெற்றிபெற்ற பின்னர் மக்களை மறந்துவிடுகிறார்கள். இதனால் கடந்த கடந்த பொதுத் தேர்தலிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இறுதிக்கட்டத்திலேயே பாதுகாக்கப்பட்டது.
அதனால் இந்த தேர்தலில் கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளவே எமது கட்சி கொழும்பில் போட்டியிட தீர்மானித்தது. அதனால் கொழும்பு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM