தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை நடிகருமான டெல்லி கணேஷ் உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
அவருக்கு தமிழ் திரை உலகினர் மட்டுமல்லாமல் பல்வேறு திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கும் நடிகர் டெல்லி கணேஷ் முதுமை காரணமாகவும், உடல் நல குறைவு காரணமாகவும் சில வாரங்களாக அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. இதை கேள்விப்பட்ட திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்து, தங்களது இறுதி அஞ்சலியை செலுத்துவதற்காக அவருடைய வீட்டிற்கு வருகை தந்தனர்.
சிவக்குமார், கார்த்தி, இயக்குநர் சந்தான பாரதி, இயக்குநரும், நடிகருமான மணிகண்டன் உள்ளிட்ட பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன் நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். இவர்களைத் தொடர்ந்து ஏராளமான திரையுலகினர் அவரது வீட்டிற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
பாரதப் பிரதமர் மோடி ,தமிழக முதல்வர் ஸ்டாலின், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'உலக நாயகன்' கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் டெல்லி கணேஷின் மறைவிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.
பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் டெல்லி கணேஷின் பூத உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM