ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான 'புஷ்பா 2' திரைப்படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனமாடியிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா 2 -தி ரூல்' எனும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாஸில் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
மிரோஸ்லா குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆறாயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு இன்றைய இளம் தலைமுறையினரின் கனவு கன்னி நடிகை ஸ்ரீ லீலா கவர்ச்சி நடனம் ஆடுகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'உ சொல்றியா..' எனத் தொடங்கும் பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சியாக நடனமாடியிருப்பார்.
இந்தப் பாடல் படத்தின் வெற்றிக்கு முக்கிய அம்சமாக இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் படக் குழுவினர் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலாவை கவர்ச்சியாக நடனம் ஆட வைத்திருக்கிறார்கள். இந்த பாடலுக்கும், பாடலுக்கான நடனத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM