(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு வாழ் மக்களை இதுவரை காலமும் ஏமாற்றிவந்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஏமாறாமல் கொழும்பு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஈழமக்கள் ஜனநாயக கட்சி முன்வந்திருக்கிறது.
அதனால் கொழும்பு மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எமது கட்சியை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்
கொழும்பில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மை கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அவர்களுடன் பேரம் பேசுவார்கள்.
அந்த பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு தேவையான சலுகைகள் கிடைக்காமல் போய்விட்டால் மக்களை கைவிட்டு விடுகிறார்கள்.
பின்னர் பெரும்பான்மை கட்சிகள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என குறைசொல்லிக்கொண்டே கொழும்பு வாழ் மக்களை இந்த மக்கள் பிரதிநிதிகள் ஏமாற்றி வந்துள்ளனர்.
அந்த நிலை எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்பதற்காக இந்த தேர்தலில் தமிழ் பேசும் கட்சியாக கொழும்புவாழ் மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி கிடைத்திருக்கிறது.
இந்த மக்கள் தங்கள் எந்த பிரச்சினையையும் எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடியாக சந்தித்து பேசலாம். நிச்சியமாக அவர் இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுப்பார்.
அத்துடன் நாங்கள் எப்போதும் இணக்க அரசியல் மூலமே மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கிறோம். அந்தவகையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுடன் இணைந்தே எமது அரசியலை கொண்டுசெல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
அதனால் எமது கட்சியில் அனைத்து இன மக்களைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். பெளத்த தேரர் ஒருவரும் இந்த தேர்தலில் எமது கட்சியில் இருந்து போட்டியிடுகின்றார்.
நானே ராஜா என கூறிக்கொண்டிருப்பதில் பயனில்லை மக்களே ராஜா. மக்களின் வாக்குமூலம் நாங்கள் வெற்றிபெற்றால், அந்த மக்களுக்கு சேவை செய்யும் மக்கள் பிரதிநிதிகளே தவிர ராஜாக்கள் அல்ல.
அதனால் கொழும்பு மக்கள் இந்தமுறை மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எமது வீணை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
கொழும்பு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்தால் இரண்டு தமிழ் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM