கடந்த சனிக்கிழமை சுன்னாகத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜக செயற்பாட்டுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கம் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சுன்னாகம் பொலிஸார் சிறு குழந்தையை தூக்கி வீசி, தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
ஊழலை ஒழிக்கிறேன் எனக் கூறும் இந்த அரசு நிச்சயமாக இதற்கு பதில் கூற வேண்டும். ஊழலை இல்லாமல் ஆக்க வேண்டுமானால், அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறக்கூடாது.
யாழில் நடக்கும் சகல அதிகார துஷ்பிரயோகத்துக்கும் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
சுன்னாகத்தில் பொலிஸார் மேற்கொண்ட அராஜகம் தொடர்பில் எடுத்த நடவடிக்கையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
யாழ். மாவட்ட குடிமகனாக நான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
ஊழலற்ற அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க நாமும் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னர் பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோக செயற்பாட்டுக்கு நடவடிக்கை எடுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM