'குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

11 Nov, 2024 | 03:54 PM
image

'ஆர் ஆர் ஆர் ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், 'குளோபல் ஸ்டார்' என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் ராம்சரண் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.  

அரசியலை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் & ஆதித்யா ராம் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதியன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லக்னோவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, நடிகர் எஸ். ஜே. சூர்யா, தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் பங்குபற்றினர்.

இந்த கிளர்வோட்டத்தில் ராம்சரண் மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் துறுதுறு இளைஞனாகவும், மக்களின் தேவைகளை அரசின் சார்பில் நிறைவேற்றும் ஐஏஎஸ் அதிகாரி வேடத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் எமோஷனல் காட்சிகள் ஆகியவை சரியான கலவையில் அமைந்திருப்பதாலும் படத்தின் கிளர்வோட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. 

இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 45 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30