நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் அப்டேட்

Published By: Digital Desk 2

11 Nov, 2024 | 02:35 PM
image

இயக்குநராகவும் , நடிகராகவும் அறிமுகமான முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டிராகன்' திரைப்படத்தின் புதிய தகவல்களை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'டிராகன்' எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர்களும், நடிகர்களுமாகிய கே. எஸ். ரவிக்குமார் , கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின்,  நடிகை கயாடு லோகர் , ஜார்ஜ் மரியான், இந்துமதி, வி ஜே சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.‌

நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார் ரொமான்டிக் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்மென்ட் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம் ,கல்பாத்தி எஸ். கணேஷ் ,கல்பாத்தி எஸ். சுரேஷ், ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திர நடிகர்களும், அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர்களையும் பிரத்யேக புகைப்படத்துடன்  படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34
news-image

'இசை ஞானி' இளையராஜா இசையில் திரைப்படமாக...

2024-12-04 17:22:18