சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'கங்குவா' எனும் திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தினை படக் குழுவினர் உலகம் முழுவதும் பறந்து பறந்து சென்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து டுபாயில் நடைபெற்ற விளம்பர நிகழ்வில் படத்தின் புதிய முன்னோட்டத்தினை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த முன்னோட்டத்தில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் அனைத்தும் நேர்த்தியாகவும், கண்களை இமைக்க மறந்து அகல விரித்து பார்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதால்... ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தின் இறுதியில் நடிகர் கார்த்தியின் தோற்றமும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் ஆர்வம் உச்சகட்டத்தை தொட்டிருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளரான கே. ஈ. ஞானவேல் ராஜா,' இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்' என்றும், 'இந்த திரைப்படம் இந்திய திரை உலகில் வசூலில் புதிய சாதனையை படைக்கும்' என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா' திரைப்படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா படானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
ஃபேண்டஸி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கங்குவா' திரைப்படம் பட மாளிகைகளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் கட்டற்ற உற்சாகத்தில் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM