வருணின் 5 விக்கெட் குவியல் பலனற்றுப்போனது; ஸ்டப்ஸின் துடுப்பாட்ட உதவியுடன் தென் ஆபிரிக்கா வெற்றி

11 Nov, 2024 | 12:14 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கெபெத்தா, சென் ஜோர்ஜ் பார்க் விளையாட்டரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா ஒரு ஓவர் மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

தென் ஆபிரிக்காவின் இந்த வெற்றியை அடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 124 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா, கடும் சிரமத்துக்கு மத்தியில் ஒரு ஓவர் மீதமிருக்க 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் ரெயான் ரிக்கெல்டனின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்திய பின்னர் அடுத்த 5 விக்கெட்களை வருண் சக்கரவர்த்தி தொடர்ச்சியாக வீழ்த்த தென் ஆபிரிக்கா 13ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

16ஆவது  ஓவரில் அண்டைல் சிமிலேனின் விக்கெட்டை ரவி பிஷ்னோய் வீழ்த்த தென் ஆபிரிக்கா தர்மசங்கடத்திற்குள்ளானது. (86 - 7 விக்.)

ஆனால், ஒரு பக்கத்தில் தனது விக்கெட்டை தக்கவைத்துக்கொண்டு பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் ஜெரால்ட் கொயெட்ஸியுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை உறுதிசெய்தார்.

ட்ரைஸ்டன் ஸ்டப்பஸ் 47 ஓட்டங்களுடனும் ஜெரால்ட் கொயெட்ஸி 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்களைவிட ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (24), ரெயான் ரிக்ல்டன் (13) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்ளைக் கைப்பற்றி சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது போட்டியில் அபார சதம் குவித்த சஞ்சு செம்சன் இந்தப் போட்டியில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா, அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத்தவறினர்.

ஹார்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 27 ஓட்டங்களையும் திலக் வர்மா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன், ஜெரால்ட் கோயெட்ஸி, அண்டைல் சிமிலேன், ஏய்டன் மார்க்ராம், நிக்கபாயோம்ஸி பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46
news-image

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; 2ஆம் நாள்...

2024-12-06 23:00:27
news-image

ஸ்டாக் 6 விக்கெட்களை வீழ்த்த இந்தியா...

2024-12-06 18:53:12
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:35:06
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:29:25
news-image

ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் பதவியை ...

2024-12-06 16:40:42
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100...

2024-12-06 15:35:44