மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தணமல்வில மற்றும் கடுவன ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 41 மற்றும் 46 வயதுயைடவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 6,179 கஞ்சா செடிகளும் மற்றையவரிடமிருந்து 8,159 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர்களும் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM