அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிதிணைக்களம் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸ் பேச்சாளா நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்து தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அமெரிக்கா தெரிவித்துள்ள தகவல் குறித்தும் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளிற்காகஇலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் வெளிநாட்டு தூதரகங்களுடன் நிச்சயம் தொடர்புகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என தெரிவிக்கப்படும் பர்ஹாட் சகேரி என்ற நபர் இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM