அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்!

11 Nov, 2024 | 10:43 AM
image

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரவத்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

அம்பலாங்கொடை, உரவத்த பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனங்காணாத நபரொருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். 

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணவனும் மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொடை , குளீகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். 

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணவன், மனைவி இருவரும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் கணவன் பல முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மனைவியின் சகோதரனும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25 13:05:29
news-image

மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி...

2026-01-25 13:50:34
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-01-25 13:08:42
news-image

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த...

2026-01-25 12:26:18
news-image

குளிரிலும் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப்...

2026-01-25 12:32:31
news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42
news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 12:04:52
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46