உலகம் முழுவதும் கத்தோலிக்க திரு அவையானது கார்த்திகை மாதம் 2 ஆம் திகதியை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நாளாக நினைவுகூர்வதுடன், கார்த்திகை மாதம் முழுவதையும் எம்முடன் வாழ்ந்து இறந்தவர்களை நினைவுகூரும் மாதமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை இறந்துபோன கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுடன் குறிப்பாக எமது கொழும்புக்கிளையில் அங்கத்தவர்களாக இருந்து மரித்த அனைத்து உறுப்பினர்களையும் நினைவு கூரும் முகமாக வருடாவருடம் நினைவுத்திருப்பலி நிறைவேற்றி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பது கொழும்புக்கிளையின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக இருந்துவருகின்றது.
இவ்வருடமும் கார்த்திகை மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புனித லோறன்ஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்து மரித்த பத்திரிசிய குடும்பத்தின் அங்கத்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்க இருக்கின்றார்கள்.
குறித்த திருப்பலியில் பங்குபற்றி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்க கொழும்புக்கிளையின் அங்கத்தவர்கள், கொழும்பில் வசிக்கும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் இறந்த கொழும்புக்கிளை அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து நிற்கின்றார்கள்.
மேலதிக தகவல்களுக்கு பொதுச்செயலாளர் மரியதாஸ் யூட் டினேஷ் 077-9498889
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM