9 வயது சிறுவனுக்கு பலாத்காரமாக கசிப்பு அருந்த கொடுத்தவர் கைது !

Published By: Digital Desk 2

11 Nov, 2024 | 12:20 PM
image

9 வயது சிறுவனுக்கு பலாத்காரமாக கசிப்பு அருந்த கொடுத்தாக கூறப்படும் சந்தேக  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கசிப்பு அருந்தி சுகயீனமுற்ற சிறுவன் ஒருவன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கஹதுடுவ சிங்ககம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சுகயீனமுற்ற சிறுவனின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சந்தேக நபர், மேலும் இரு சிறுவர்களுக்கு பலாத்காரமாக மது அருந்த கொடுத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள போதிலும் அது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07