(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறை பொதுத்தேர்தலில் மக்கள் திருத்திக் கொள்ள வேண்டும். முழு பாராளுமன்றத்தையும் திசைக்காட்டியின் உறுப்பினர்களால் நிரப்பினால் பாராளுமன்றமும் ஜனாதிபதிக்கு அடிபணியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுரம் எப்பாவெல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பதவியேற்றதன் பின்னர் மறந்து விட்டார். தேர்தல் வெற்றிக்காக ஒட்டுமொத்த மக்களையும் தவறாக வழிநடத்தி வெற்றிப் பெற்றார் என்பதே உண்மை.
சிறந்த அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த ஒன்றரை மாதங்களில் அரசியலில் விரக்தியடைந்துள்ளார்கள். இதுவே உண்மை மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகளினால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறை பொதுத்தேர்தலில் மக்கள் திருத்திக் கொள்ள வேண்டும். முழு பாராளுமன்றத்தையும் திசைக்காட்சியின் உறுப்பினர்களினால் நிரப்ப வேண்டும் என்று ஜனாதிபதி யாரை திருப்திப்படுத்த குறிப்பிடுகிறார்.
ஒரு அரசியல் கட்சி பெரும்பான்மை பலத்தை கைப்பற்றினால் முரண்பட்ட அரசியல் நிலைவரமே தோற்றம் பெறும். 2020 ஆம் ஆண்டும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.
பாராளுமன்றத்தின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய கோட்டபய ராஜபக்ஷ தன்னிச்சையான முறையில் செயற்பட்டார். இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. அதேபோல் அரசியல் வங்குரோத்து நிலையும் ஏற்பட்டது.
ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்திக்கு தனிப்பெரும்பான்மை பலத்தை 2020 ஆம் ஆண்டு சூழலை மக்கள் ஏற்படுத்தக் கூடாது. உணர்ச்சிகளுக்கும், வெறுப்புகளுக்கும் முன்னுரிமை வழங்காமல் பொருளாதாரத்தை பற்றி சிந்தித்து பொதுத்தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM