(நெவில் அன்தனி)
பேர்த் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக சம்பியன் (50 ஓவர்) அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் மிக இலகுவாக பாகிஸ்தான் வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 22 வருடங்களின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக பாகிஸ்தான் வீழ்த்தி வரலாறு படைத்தது.
மெல்பர்னில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 2 விக்கெட்களால் தோல்வி அடைந்த பாகிஸ்தான், அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் அபார பந்துவீச்சின் உதவியுடன் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திக் கொண்டிருந்தது.
அப் போட்டியில் அவுஸ்திரலியாவை 35 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான், கடைசிப் போட்டியில் மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களின் அசாத்திய பந்துவீச்சுகளால் அவுஸ்திரேலியாவை 31.5 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு சுருட்டி வெற்றியிட்டிது.
கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் சோன் அபொட் மாத்திரமே ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.
அவருக்கு அடுத்ததாக 22 உதிரிகளே இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.
பின்வரிசையில் அடம் ஸம்ப்பா 13 ஓட்டங்களையும் ஸ்பென்ஸர் ஜோன்சன் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நசீம் ஷா 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 26.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
சய்ம் அயூப் 42 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 37 ஓட்டங்ளையும் பெற்று 84 ஓட்டங்களைப் பகிரந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து பாபர் அஸாம் (28 ஆ.இ.), அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான் (30 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் லான்ஸ் மொறிஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஹரிஸ் ரவூப்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM