கொழும்பில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது !

Published By: Digital Desk 2

10 Nov, 2024 | 09:20 PM
image

கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின் போது கல்கிஸ்சை மற்றும் உடுகம பகுதிகளில் மூவர் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , பதவல வீதிக்கு அருகில் , ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38, 40 வயதுடைய மக்கொன மற்றும் மொரட்டுவ  பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து , 10 கிராம் 350 மில்லிகிராம்  மற்றும் 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை , இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்சை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , உடுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகிகம பிரதேசத்தில், ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின்  அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 46 வயதுடைய  உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 12 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை , இவர் மேலதிக விசாரணைகளுக்காக  உடுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் , மிரிஹான பொலிஸ் பிரிவில் ,  ஐஸ் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் ஒருவர்  சனிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , 30 வயதுடைய பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 52 கிராம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை கைது செய்யப்பட்டவர் ,  மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் , ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவொன்று  மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 510 மில்லிகிராம் ஹெரோயின் , 08 கிராம் 570 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , போதைப்பொருள் விற்பனையில் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 18500 ரூபா ரொக்கப்பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை கைது செய்யப்பட்டவர் , ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான , மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ  மற்றும் உடுகம  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23
news-image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு...

2026-09-06 14:41:52
news-image

அநுர அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை அடகு...

2026-09-06 14:27:30
news-image

அநுரவின் வீதி மூடல் கெடுபிடிகளுக்கு பொதுஜன...

2026-09-06 16:13:24
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும்...

2026-09-06 16:14:05
news-image

ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அழிக்கும் செயற்பாடுகளில் அரசு...

2026-09-06 17:00:12