(நெவில் அன்தனி)
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான திட்டங்களில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்மானம் போட்டியின்போது சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது.
இரண்டு இடங்களில் ஐசிசி சம்பின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறித்து கவனம் செலுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
தமது போட்டிகளை துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடத்தவேண்டும் என்ற எழுத்து மூல யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது.
2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய 8 நாடுகள் பங்குபற்றவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM