யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவியர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ வலைபந்தாட்டப் போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் சம்பியனாகியுள்ளனர்.
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் கொழும்பு கிளையினர் 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்தப் போட்டி, கொழும்பு - 10 புனித ஜோசப் கல்லூரியின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்த வலைப்பந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாண பெண்கள் பாடசாலைகளான சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரி, திருக்குடும்ப கன்னியர் மடம் மற்றும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகியவற்றின் கொழும்புக் கிளையின் பழைய மாணவிகள் பங்குபற்றி மிகவும் உற்சாகமாக விளையாடினர்.
இதற்கு பிரதம விருந்தினராக மனிதநேயம் அறக்கட்டளையின் தலைவர் அபிராமி கைலாசப்பிள்ளை மற்றும் கௌரவ விருந்தினராக யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் உதவி அதிபர் சரோஜினி தர்மலிங்கம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM