பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரான் நட்டு மக்களின் அறுதி பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ள குறித்த தேர்தலில், சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று  தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி கட்சி தலைவர் மரின் லீ பென்னை தோல்வியுற செய்துள்ளார்.

மேலும் தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த லீ பென், தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், ஆளும் தரப்பிற்கு பலமான எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களையும், எதிர்காலத்தில் பிரான்ஸுக்கிடையிலான நட்பியல் தொடர்புகள் குறித்து செயற்படவுள்ளதாக கருத்து பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .