கொழும்பில் பலர் இணைந்து மேற்கொண்ட நிதி மோசடியை கணிணி குற்ற விசாரணை பிரிவினர் கண்டுபிடித்துள்ளதுடன் 59 பேரை கைதுசெய்துள்ளனர்.
நிதிமோசடி திட்டத்திற்கு தலைமைதாங்கிய இருவர் உட்பட 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வெளிநாட்டவர்களை இலக்குவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டதுடன் சுமார் 300 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த வேவ்டெக் என்ற நிறுவனம் வெளிநாட்டவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது என சிஐடியினரிடம் தென்கொரிய தூதரகம் வியாழக்கிழமை முறைப்பாடு செய்திருந்தது.
வர்த்தகமுயற்சி என்ற பெயரில் தென்கொரியாவை சேர்ந்த ஒருவரிடம் 300 மில்லியன் மோசடி செய்துள்ளனர் என தென்கொரிய தூதரகம் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தது.
வர்த்தக முயற்சியொன்றில் முதலீடு செய்வதாக தெரிவித்து தென்கொரிய பிரஜையொருவரிடமிருந்து ஒருமில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள் பின்னர் அதனை திருப்பிக்கொடுக்கவில்லை என தென்கொரிய தூதரகம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட சிஐடியின் சிசிஐடி பிரிவினர் கொழும்பு ஹவெலொக் வீதியில் ஆடம்பர தொடர்மாடியொன்றிலிருந்து மேற்கொள்ளப்படு;ம் மோசடி குறித்து கண்டுபிடித்தனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 57 பேர் இலங்கையர்கள் உட்பட 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 27 பேர் பெண்கள் அவர்களில் இருவர் கர்ப்பிணிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஐந்துமொழிகளில் பேசும் திறமை மிக்கவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் இதன் பின்னர் பெண் சட்டத்தரணியொருவரும் இந்த நடவடிக்கைகளிற்கு முகாமையாளராக செயற்பட்டு வந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யபட்ட ஊழியர்கள் தங்களிற்கு ஐடி தொழிலில் வேலைவாய்ப்பு என தெரிவித்தே வேலைக்கு சேர்த்தார்கள் ஆனால் தங்களை வேலைக்கு சேர்ப்பதற்கு முன்னர் ஜப்பானிய கொரிய ஜேர்மனிய மொழிகளில் தங்களிற்கு திறமையுள்ளதா என்றே பரிசோதித்தார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் ஆடம்பர அலுவலகத்திற்கு 9 மில்லியன் செலுத்திவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM