இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை ,யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கத்தார் இடைநிறுத்தியுள்ளது.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே கத்தாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹமாசினை தனது அரசியல் அலுவலகத்தினை மூடுமாறு கத்தார் கேட்டுக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கத்தார் அதற்கு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் கத்தாரின் வெளிவிவகார அமைச்சு இதனை நிராகரித்துள்ளது.ஹமாஸ் அமைப்பும் இதனை நிராகரித்துள்ளது.
ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான இணக்கப்பாட்டினை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள கத்தார் கடந்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பும் இணக்கத்திற்கு வராவிட்டால் அனுசரணை முயற்சிகளை இடைநிறுத்தப்போவதாக தெரிவித்திருந்தது என கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM