சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கட்டுநாயக்கவில் கைது

Published By: Digital Desk 2

10 Nov, 2024 | 10:37 AM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 17 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய தாய் மற்றும் 38 வயதுடைய மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் துபாயிலிருந்து நேற்று பிற்பகல் 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "பிளாட்டினம்" வகையுடைய 78,200 சிகரெட்டுகள் அடங்கிய 391 சிகரெட் கார்டூன்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இம்மாதம் 13ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05
news-image

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி -...

2024-12-08 16:39:09
news-image

மின்கட்டணத்தை 2/3 மடங்கால் குறைப்பதாகக் கூறிய...

2024-12-08 15:33:06
news-image

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் கவனம்...

2024-12-08 15:39:23
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி...

2024-12-08 15:34:58
news-image

மின்கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு பேணுவதற்கு பரிந்துரை

2024-12-08 15:28:40
news-image

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள்...

2024-12-08 15:29:37
news-image

ஜா - எல பகுதியில் ஹெரோயினுடன்...

2024-12-08 15:31:51
news-image

வரக்காபொல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர்...

2024-12-08 15:26:54