முதலாவது ரி-20 இல் பந்துவீச்சாளர்களின் திறமையால் நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வென்றது  இலங்கை 

10 Nov, 2024 | 07:05 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை ஒரு ஓவர் மீதம் இருக்க 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது.

பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகள், சரித் அசலன்கவின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டம் என்பன இலங்கையை ஒரு வெற்றிபெறச்செய்தது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இலங்கை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது ஓவரில் நியூஸிலாந்து 12 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அதன் பின்னர் இலங்கையின் பந்து வீச்சில் சிரமத்தை எதிர்கொண்டு விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்தது.

ஸக்கரி பௌல்க்ஸ், இஷ் சோதி ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 39 ஓட்டங்கள் நியூஸிலாந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது.

முன்வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 27 ஓட்டங்களையும் பின்வரிசையில் ஸக்கரி பௌல்க்ஸ் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.

அவர்களைவிட வில் யங் (19), அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் (16) ஆகிய இருவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிமுக வீரர் மிச்செல் ஹே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

நியூஸிலாந்தின் எண்ணிக்கையில் 16 உதிரிகள் அடங்கியிருந்தன.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவன் துஷார 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சுமாரான மொத்த எண்ணிக்கையான 136 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரராக களம் இறங்கிய குசல் மெண்டிஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

பெத்தும் நிஸ்ஸன்க (19), குசல் ஜனித் பெரேரா (23) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

எனினும் இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (55 - 3 விக்.)

தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.;

பானுக்க ராஜபக்ச சாதிக்கக்கூடியவர், அவரது பாத்திரம் என்னவென்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார் என அணித் தலைவர் சரித் அசலன்க கூறியபோதிலும் அது பொய்யாகிப்போனது.

பானுக்கு ராஜபக்ஷ வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (118 - 5 விக்.)

எனினும் அணித் தலைவர் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்க தமது அணிக்கு உதவினர்.

வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டம் இழந்தபோது இலங்கையின் வெற்றிக்கு மேலும் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அணித் தலைவர் சரித் அசலன்கவும் துனித் வெல்லாலகேயும் வெற்றிக்கு தேவைப்பட்ட மீத ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

சரித் அசலன்க 35 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஷக்கரி பௌல்க்ஸ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47
news-image

நஞ்சிங் உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்க...

2025-03-14 13:39:02
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சங்கா சதம்...

2025-03-12 17:16:17