மலேசிய பினாங்கு மாநிலத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 4, 5ஆம் திகதிகளில் தேவான் ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெறவுள்ள 11ஆவது ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
அந்நிகழ்வு தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகம், மலேசிய அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் அனுசரணையுடன், மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம், மலேசிய இந்திய பினாங்கு வர்த்தக சம்மேளனம், மலேசிய முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் கலை, கலாசாரம், பாரம்பரிய உணவு, உடை, பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களின் பேருரை போன்ற நிகழ்வுகளுடன், குளோபல் கனெக்ட் கான்ஃபரன்ஸ் மற்றும் கண்காட்சி முதலான நிகழ்வுகளும் நான்கு அமர்வுகளாக நடைபெறவுள்ளன.
அந்த நிகழ்வில் பெண் தொழில் முனைவோர் மற்றும் பெண் ஆளுமைகள் பங்கேற்கும் ஓர் அமர்வு நடைபெறவுள்ளது.
அதில் பல்வேறு நாடுகளில் உள்ள பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யவும், தாங்கள் பேசும் தாய்மொழியிலேயே சந்தைப்படுத்தவும், பல்வேறு நாடுகளில் உள்ள பெண் தொழில் முனைவோர்களுக்கு தொழில் முறை கற்கவும், தமிழ் பெண் சமுதாயம் மேம்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் கவுன்சிலர்கள், மேயர்கள், சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள் போன்றோர் பங்கேற்று அரசாங்கங்களின் சலுகைகள், மானியங்களை எவ்வாறு பெறலாம் என அறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது என உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM