(நெவில் அன்தனி)
சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தொடர்ச்சியான சதங்களைக் குவித்து அபூர்வமான மைல்கல் சாதனையை இந்திய ஆரம்ப வீரர் சஞ்சு செம்சன் நிலைநாட்டியுள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிராக ஹைதராபாத்தில் கடந்த மாதம் 111 ஓட்டங்களைக் குவித்த சஞ்சு செம்சன், டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் 107 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.
இதில் 88 ஓட்டங்கள் பவுண்டறிகளில் (7 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள்) வந்தவையாகும்.
இதன் மூலம் அடுத்தடுத்த சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சதங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் நான்காவது வீரராக இடம்பிடித்தார். இந்திய வீரர்களில் அடுத்தடுத்த சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையை சஞ்சு செம்சன் பெற்றுக்கொண்டார்.
பிரான்ஸ் வீரர் கஸ்டவ் மெக்கியொன் (109 எதிர் சுவிட்சர்லாந்து, 101 எதிர் நோர்வே), தென் ஆபிரிக்க வீரர் ரைலி ரூசோவ் (100 ஆ.இ. எதிர் இந்தியா, 109 எதிர் பங்களாதேஷ்), இங்கிலாந்து வீரர் பில் சோல்ட் (109 ஆ.இ., எதிர் மேற்கிந்தியத் தீவுகள், 110 எதிர் மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் அடுத்தடுத்த ரி20 போட்டிகளில் சதம் குவித்த மற்றைய மூவர் ஆவர்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கிங்ஸ்மீடில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. இதன் பிரகாரம் 61 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது.
சஞ்சு செம்சனின் அபூர்வ சாதனையை அடுத்து அவர் மற்றொரு ரோஹித் ஷர்மாவாக மிளிர்வதாகக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் நிரந்தர ஆரம்ப வீரராக 2013இல் ரொஹித் ஷர்மா எவ்வாறு அசத்தினாரோ அதேபோன்று இப்போது சஞ்சு செம்சன் தனது பங்கை ஆற்றிவருகிறார்.
மத்திய வரிசை வீரராக தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த விக்கெட் காப்பாளர் சஞ்சு சென்சன், கடந்த காலங்களில் முதலாம் இலக்கத்திலிருந்து 7ஆம் இலக்கம்வரை பல நிலைகளில் துடுப்பெடுத்தாடி வந்துள்ளார்.
ஆரம்ப வீரராகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் துடுப்பாட்டத்தில் சஞ்சு செம்சன் வெகுவாக முன்னேறியிருப்பதை அவர் குவித்த அடுத்தடுத்த சதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM