முற்பிறவி கர்மாவை அகற்றும் நாம யோகமும், அதற்கான பரிகாரமும்

09 Nov, 2024 | 07:48 PM
image

இந்த பிறவியில் ஆகாம்ய கர்மா,  பிராப்த்த‌கர்மா ஆகிய கர்மாக்களின் பிடியில் சிக்கி, எமக்கான சுப பலன்களில் தாமதத்தையும், எமக்கான கெடு பலன்களில் விரைவு தன்மையையும் நாம் எதிர்கொள்கிறோம். இதனால் மகிழ்ச்சியை விட கவலை அதிகமாக எம்மை ஆட்கொள்கிறது. 

இந்நிலையில் இந்த பிறவியில் மட்டுமல்லாமல் கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் அடிப்படையில் எமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மாக்களில் இருந்து விலகுவதற்கான பரிகாரத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நாம யோகத்தின் அடிப்படையில் சூட்சமமாக உணர்த்தி இருக்கிறார்கள்.

இந்தப் பிறவியில் நீங்கள் செய்த பாவங்களும், கடந்த பிறவியில் உங்களது முன்னோர்கள் செய்த பாவங்களும், உங்களுக்கு அடுத்ததாக இந்த உலகை உலகில் வாழும் உங்களுடைய வாரிசுகளுக்கு கர்மாக்களினால் எந்த வித தொல்லையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம யோகத்தின் வரிசையில் முதலாவதாக இடம் பிடித்திருக்கும் விஷ்கம்பம் நாம யோகத்தை பயன்படுத்தலாம். 

இந்த நாம யோகத்தில் ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்ட பரிகாரத்தை செய்தால் கடந்த பிறவி,  இந்தப் பிறவி,  அடுத்த பிறவி , ஆகிய முப்பிறவியிலும் செய்த பாவங்கள் விலகி, சுப பலன்கள் கிடைக்கும்.

அதற்கு சனிக்கிழமையும், விஷ்கம்பம் நாம யோகமும் இணைந்து வரும் நாட்களில் கல் உப்பையும், மிளகையும் எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் (கம்பத்தடி) மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் இந்த இரண்டையும் வைத்து மனதார பிரார்த்தனை செய்து வந்தால் முற்பிறவி கர்மாவின் கெடு பலன்கள் குறைவதுடன், வீடு, வாகனம் தொடர்பான அனைத்து வித பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

மேலும் இவர்கள் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள திருச்சி மாநகரத்திற்கு அருகே இருக்கும் முக்கொம்பு எனும் சுற்றுலா தலத்திற்குச் சென்று அந்த தலத்திற்கு அருகே உள்ள ஜீவ சமாதியில் சனிக்கிழமைகளில் வழிபட்டாலும் முப்பிறவியிலும் செய்த கர்மாக்களின் கெடு பலன்கள் குறைந்து, சுப பலன்கள் கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15