'வெற்றிநடையை தொடர்வதும் தரவரிசையில் முதல் 3 இடங்களுக்குள் வருவதுமே எமது குறிக்கோள்' - சரித் அசலன்க தெரிவிக்கிறார்

09 Nov, 2024 | 05:36 PM
image

(நெவில் அன்தனி)

ண்மைக்காலமாக மிகச் சிறப்பாக விளையாடிவரும் இலங்கையின் வெற்றிநடையைத் தொடர்வதும் சர்வதேச ஒருநாள் மற்றும் ரி20 தரவரிசையில் முதல் 3 இடங்களுக்குள் வருவதுமே தமது குறிக்கோள் என இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார்.

'எமது இந்தக் குறிக்கோளை அடையும் பொருட்டு இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே வீரர்களை களம் இறக்கிவருகிறோம். தெரிவுக் குழுவினர், அணியின் தலைமைப் பயற்றுநர், அணித் தலைவராகிய நான் ஆகிய அனைவரும் கூட்டிணைந்து ஒரு சிறந்த, பலமான அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்து வருகிறோம்.

'2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 15 வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த அணியைக் கட்டியெழுப்புவதே எமது பிரதான நோக்கம் ஆகும். தற்போதைய இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் விளையாடிவருபவர்கள் அனைவரும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றமை திருப்தி தருகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் மிகச் சிறந்த 11 வீரர்களையே தெரிவுசெய்கிறோம். அதிலிருந்து 15 பேரை உலகக் கிண்ணத்துக்கு தயார்ப்படுத்துவோம்' என சரித் அசலன்க மேலும் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, நியூஸிலாந்துக்கு எதிராக இன்று இரவு ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடர் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியன குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

'எப்போதும்போல எமது சக்தி சுழல்பந்துவீச்சாளர்கள்தான். இதனைத் கருத்தில்கொண்டு ரி20க்கான அணி தெரிவின்போது சுழல்பந்துவீச்சுக்கே முன்னுரிமை கொடுக்கவுள்ளோம். எவ்வாறாயினும் பருவ மழை பெய்யுமாக இருந்தால் ஒரு மேலதிக வேகப்பந்துவீச்சாளரை அணியில் இணைத்துக்கொள்வோம்' என்றார்.

மழையினால் போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டால் பெரும்பாலும் சகலதுறை வேகப்பந்துவீச்சாளர் சமிந்து விக்ரமசிங்க இறுதி அணியில் இணைத்துக்கொள்ளப்பட  வாய்ப்புள்ளது.

தம்புள்ளையில் நேற்றைய தினம் மழை பெய்தபோதிலும் இன்றைய தினம் இதுவரை சீரான கால நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கிறது.

நியூஸிலாந்துடனான தொடர்களில் ஆரம்பம் சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் சரித் அசலன்க குறிப்பிட்டார்.

'இதற்கு முந்தைய போட்டிகளில் ஆரம்ப வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் அவை முடிந்துபோன கதை. இனி நடக்கப்போவது புதிய தொடர். எனவே ஆரம்பம் பலமாக இருப்பது முக்கியம்' என்றார் அவர்.

இதேவேளை, தமது சிரேஷ்ட வீரர்கள் பலர் இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கு தயாராக வேண்டியிருப்பதால் இளம் வீரர்களுடன் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளதாக நியூஸிலாந்து அணியின் பதில் தலைவர் மிச்செல் சென்ட்னர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0 - 2 என தோல்வி அடைந்த நியூஸிலாந்து, அதன் பின்னர் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 - 0 என முழுமையாக வெற்றிபெற்றது.

அத் தொடரில் 15 விக்கெட்களை வீழ்த்திய அஜாஸ் பட்டேல் இலங்கைக்கு எதிரான தொடருக்கு வருகை தரவில்லை.

இரண்டாவது போட்டியில் 13 விக்கெட்களை வீழ்த்திய சென்ட்னர் 3ஆவது போட்டியில் விளையாடவில்லை. ஆனால், இலங்கை சுற்றுப் பயணத்தில் ரி20 அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

'நியூஸிலாந்து அணியில் இடம்பெறும் இளம் வீரர்கள் எதிர்காலத்தில் நிரந்தரமாக விளையாடக்கூடியவர்கள். அவர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. எமது புதிய வீரர் மிச்செல் ஹே மிகச் சிறந்த விக்கெட்காப்பாளர் ஆவார்' என மிச்செல் சென்ட்னர் குறிப்பிட்டார்.

அணிகள் விபரம்

இலங்கை: சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சமிந்து விக்ரமசிங்க, அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரண, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார, ஜெவ்றி வெண்டசே, துனித் வெல்லாலகே.

நியூஸிலாந்து: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), ஹென்றி நிக்கல்ஸ், டிம் ரொபின்சன், வில் யங், மிச்செல் ப்றேஸ்வெல், மார்க் சப்மன், ஜொஷ் க்ளார்க்சன், ஸக்கரி பௌல்க்ஸ், டீன் பொக்ஸ்க்ரொவ்ட், க்ளென் பிலிப்ஸ், ஜேக்கப் டவி, லொக்கி பேர்கசன், இஷ் சோதி, மிச்செல் ஹே, நேதன் ஸ்மித்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46
news-image

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; 2ஆம் நாள்...

2024-12-06 23:00:27
news-image

ஸ்டாக் 6 விக்கெட்களை வீழ்த்த இந்தியா...

2024-12-06 18:53:12
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:35:06
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:29:25
news-image

ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் பதவியை ...

2024-12-06 16:40:42
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100...

2024-12-06 15:35:44