bestweb

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

09 Nov, 2024 | 07:49 PM
image

எம்மில் சிலருக்கு இரவு நேரத்திலோ அல்லது பகல் தருணத்திலோ தொடர்ச்சியாக இருமல் பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு மீண்டும் மீண்டும் சைனஸ் தொல்லை ஏற்படக்கூடும். 

இவர்கள் உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் நுரையீரலில் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பு உண்டாகக் கூடும் என்றும், இதற்கு எயர்வே கிளியரன்ஸ் தெரபி எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

மூச்சு திணறல், உடற்பயிற்சியின் போது மனநிலையில் தடுமாற்றம், நுரையீரல் தொற்று பாதிப்பு அடிக்கடி ஏற்படுவது, தொடர்ச்சியான இருமல் காரணமாக சளி வெளியேறுவது, நாசி பாதையில் வீக்கம் ஏற்பட்டு அசௌகரியத்தை உணர்வது, மீண்டும் மீண்டும் சைனஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய நுரையீரல் பகுதியில் அமையப் பெற்றிருக்கும் காற்று அறைகளில் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் தடிமனான அல்லது வெளியேற இயலாத அளவிற்கு சளி இருக்கிறது என்றும் இவை காற்றை உள்ளேயும், வெளியேயும் செல்லும் பணியில் குழாய்களை அடைத்து இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

மேலும் இது ஒரு பாரம்பரியமான குறைபாடு என்றும், நுரையீரல் செரிமான மண்டலங்களில் முதன்மையாக திகழும் கணையம் ஆகிய உறுப்புகளை அதிகமாக பாதித்து சேதத்தை ஏற்படுத்துகிறது என்றும் விவரிக்கிறார்கள். 

இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் என குறிப்பிடுகிறார்கள்.

ரத்த பரிசோதனை, மரபணு பரிசோதனை ஆகியவற்றை பரிந்துரை செய்வார்கள். இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சைகளை தீர்மானிப்பார்கள். 

மேலும் நுரையீரலின் தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவார்கள். 

இதனைத் தொடர்ந்து எயர்வே கிளியரன்ஸ் தெரபி என்ற சிகிச்சையை வழங்கி நிவாரணத்தை அளிப்பார்கள்.

இத்தகைய சிகிச்சையின் போது Bronchodilatory inhaler - Hypertonic Saline Nebulization - Chest Clapping - ஆகிய முறையில் சிகிச்சை அளித்து நிவாரணங்கள் வழங்குவர். அத்துடன் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான வாழ்க்கை நடைமுறை குறித்த அறிவுரையையும் வைத்தியர்கள் வழங்குவர்.

வைத்தியர் ஜீவிதா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56